பெண்களுக்கு நியாயம் வழங்குவதில் நீதித்துறைக்கு பெரும் பங்கு உள்ளது - குடியரசுத் தலைவர்
பெண்களுக்கு நியாயம் வழங்குவதில் இந்திய நீதித் துறை மிகப்பெரிய அளவில் பங்காற்றி வருவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச நீதித்துறை மாநாட்டில் பேசிய அவர், உச்சநீதிமன்றம் சமூக மாற்றத்துக்கு வித்திடும் வகையில் முற்போக்குடன் செயல்பட்டு வருவதாகவும், சாமானிய மனிதர்களும் எளிதில் நீதித் துறையை அணுகும் விதத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் 9 பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்திருப்பது, நாட்டின் பன்முகத்தன்மையை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்று கூறிய ராம்நாத் கோவிந்த், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அமைந்ததாக தெரிவித்தார். வழக்கு விசாரணையை விரைந்து முடித்து தீர்ப்புகளை வழங்கிட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
Comments