மறைந்த மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளை புனிதராக அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்த மறைந்த மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளையை புனிதராக உயர்த்தி போப்பாண்டவர் அறிவித்துள்ளார்.
நட்டாலத்தில் கடந்த 1712 ம் ஆண்டு பிறந்த தேவசகாயம் பிள்ளை, நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று தொண்டுகள் செய்துள்ளார். 1752 ம் ஆண்டு உயிரிழந்த இவரது நினைவாக, ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடி மலையில் தேவாலயம் உள்ளது.
கடந்த 2012 ம் ஆண்டு தேவசகாயம் பிள்ளைக்கு, ”முக்திப்பேறு பெற்ற அருளாளர்” என்று போப் ஆண்டவரால் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 21 ம் தேதி வெள்ளிகிழமை போப் பிரான்சிஸ், புனிதர்களின் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பிச்சுவுடன் கலந்து பேசியுள்ளார். இதனை தொடர்ந்து தேவசகாயம் பிள்ளையை புனிதராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Comments