கைலாசா ரெடி..! நித்தியானந்தாவின் புதிய வீடியோ
கைலாசத்தை கட்டி முடித்து விட்டதாகவும் இனி தமிழகத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சர்ச்சை சாமியார் நித்யானந்தா புதிய வீடியொவை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டுக்குத் தப்பியோடி தலைமறைவான நித்யானந்தா, ஈக்வடார் அருகே ஒரு தீவில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியின.
அவருக்கு எதிராக பிடிவாரண்ட், இன்டர்போல் மூலம் புளுகார்னர் நோட்டீஸ் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் நிலையில் தலைமறைவாக இருந்துகொண்டே நித்யானந்தா சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடுவதும் தொடர்ந்து வருகிறது.
புதிய வீடியோவில் அவர் 20 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு கைலாசத்தை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரித்துள்ளார்.
Comments