சந்தர்ப்பவாத கூட்டணியின் விருந்தில் பங்கேற்க மனம் இல்லை - பாஜக

0 1771

மகாராஷ்ட்ராவில் திங்கட்கிழமை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், வழக்கமாக நடைபெறும் தேநீர் விருந்தை எதிர்க்கட்சியான பாஜக புறக்கணித்துள்ளது.

மார்ச் 20ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அதற்காக தயாராகிவருகிறார்.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், வாக்குறுதிகளை நிறைவேற்றாத சந்தர்ப்பவாத கூட்டணி ஆட்சியின் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளும் மன நிலையில் தாங்கள் இல்லாததால் அதற்கான அழைப்பை புறக்கணித்துள்ளதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments