விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு திட்டப்படியே ராமர் கோயில்

0 1330

விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு முன்வைத்த திட்டத்தின்படியே அயோத்தி ராமர் கோயில் கட்டப்படும் என்று ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் பொது செயலாளர் சம்பத் ராய் ((Champat Rai)) 30 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட அயோத்தி கோயில் கட்டுமானம் தொடர்பான திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்றும், கோயில் முழுவதும் அத்திட்டத்தின்படியே கட்டப்படும் என்றும் கூறினார்.

விஸ்வ ஹிந்து பரிசத் திட்டத்தில் மாற்றங்களை செய்வது குறித்து பேசி வருவோர், கோயில் கட்டப்படுவதை விரும்பாதவர்கள் என்றும், அவர்களின் செயலால் அயோத்தி கோயில் கட்டும் பணி தாமதமடையவே செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments