SRM பல்கலை.,யில் பஞ்சாப் மாணவி தற்கொலை

0 7012

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப்பைச் சேர்ந்த ஆஷாராணா என்பவர் எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் விடுதியில் தங்கி பி.டெக் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு அவர் தங்கியிருந்த விடுதி தனி அறையில் துப்பட்டாவால் கழுத்தில் தூக்கிட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

நெடு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகத்தின் பேரில் கல்லூரி நிர்வாகம் அறைக்கதவை உடைத்து பார்த்தபோது இது தெரியவந்தது.

கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற
போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments