மதுரை எம்.பி சு.வெங்கடேசனுடன் அமைச்சர் செல்லூர் ராஜு சந்திப்பு - மக்கள் பணிக்காக இணைந்து செயல்படுவதில் தவறில்லை என பேட்டி
மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சந்தித்து பேசினார்.
மதுரை ரயில் நிலையம் அருகிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தான் எழுதிய புகழ்பெற்ற வரலாற்று புதினமான வேள்பாரி புத்தகத்தை சு.வெங்கடேசன் அமைச்சருக்கு பரிசாக வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, மத்திய அரசிடமிருந்து மதுரை மாநகருக்கு தேவையான நிதியை பெறுவது குறித்து பேசவே நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்க வந்ததாக தெரிவித்தார்.
மேலும் கட்சி, கொள்கை வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், மக்கள் பணிக்காக இணைந்து செயல்படுவதில் தவறில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
Comments