இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பான ஆவணங்கள் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைப்பு
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பான ஆவணங்கள் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 19 ஆம் தேதி இரவு பூந்தமல்லி ஈவிபி பிலிம் சிட்டியில் கிரேன் விழுந்து 3 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி விசாரணை அதிகாரியாக துணை ஆணையர் நாகஜோதி நியமிக்கப்பட்டு, அவரிடம் நசரத்பேட்டை போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக காயமடைந்த 10 பேரிடம் நேரில் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜன், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுதலையானார்.
Comments