CAA பற்றி ஆதாரத்துடன் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்ட வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

0 1382

தேசிய மக்கள்தொகை பதிவேட்டினால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆளப்பிறந்தோம் என்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை சட்டத் திருத்தத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் ஆதாரத்துடன் தெரிவித்திருந்தால் அதற்கு முதலமைச்சர் விளக்கமளித்திருப்பார் என்றார்.

மேலும், மூழ்கும் கப்பலான திமுகவில் புதிய பயணியாக ராஜ கண்ணப்பன் சேர்ந்து இருப்பது, அவருக்கும் அந்த கப்பலுக்கும் ஆபத்து என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments