அதிபர் டிரம்பின் கருத்துக்கு பாரசைட் படத்தின் இயக்குநர் கண்டனம்

0 990

அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துகள் குறுகிய கண்ணோட்டம் கொண்டவை என்று  பாரசைட் பட இயக்குநர் பாங் ஜூன் ஹோ  (Bong Joon-ho) கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஆஸ்கர் விழாவில் தென்கொரிய படமான பாரசைட்டுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட விருதுகள் அளிக்கப்பட்டதை கடந்த வியாழக்கிழமை  டிரம்ப் விமர்சித்திருந்தார். இதற்கு ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பேசியபோது பாரசைட் பட இயக்குநரான பாங் ஜூன் ஹோ கண்டனம் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், டிரம்பின் கருத்துகள் தமக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக கூறினார்.  உலகளவில் கொரிய திரைப்படங்கள் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரிய படங்களை விரும்பி பார்க்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments