நாட்டின் ஆராய்ச்சி & வளர்ச்சித்துறையில் முதலீட்டை உயர்த்த அரசுத் திட்டம்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு இணையான அளவிற்கு முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சியில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அத்துறையின் செயலாளர் அசுதோஷ் ஷர்மா, முதற்கட்டமாக 40 கோடி ரூபாய் வரையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முதலீடுகள் தொடர்பாக பெரு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார்.
குறிப்பாக குவாண்டம் கம்ப்யூட்டர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு போன்ற அடிப்படை ஆராய்ச்சிகளில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் கைகோர்க்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கிடைக்கப்பெறும் நிதியின் பெரும்பகுதி, ஐஐடி கல்லூரிகளுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் அசுதோஷ் சர்மா கூறியுள்ளார்.
Comments