டிரம்ப் வருவதால் மட்டும் இந்தியா எப்படி சூப்பர் பவர் நாடாகும்?

0 1506

அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகை, இந்தியாவை மிகவும் சக்திவாய்ந்த நாடாக உருவாக்கி விடாது என்று மகாராஷ்டிர முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி, மகள், மருமகனோடு நாளை இந்தியா வருகை தரவுள்ளார். இதுகுறித்து மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய உத்தவ் தாக்கரே, டிரம்ப் வருவதால் மட்டும் இந்தியா எப்படி சூப்பர் பவர் நாடாக மாறும் என கேள்வியெழுப்பினார்.

இந்தியா சூப்பர் நாடாக மாற வேண்டும் என்றால், அதற்கு மூலதன முதலீடோடு (capital investment) சேர்ந்த மனித வளங்கள் தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments