அமெரிக்க அதிபர் வருகை - ட்ரம்ப் பயணிக்கும் டைட்டானிக் கார் ” தி பீஸ்ட்‘’

0 1772

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் 24,25 தேதிகளில் இந்தியாவிற்கு வர இருக்கிறார். இதற்கென பிரத்யேக பாதுகாப்பு அமைப்புகள் கொண்ட  “ தி பீஸ்ட் ” கார் இந்தியாவிற்கு கொண்டு வரபட்டுள்ளன. இந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.

அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்தடைந்து எங்கு சென்றாலும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள், ஆயுதங்கள், ட்ரம்ப் வரவிருக்கும் சிறப்பு விமானம், இந்தியவில் பயணம் செய்ய அதி நவீன அம்சம் கொண்ட“ தி பீஸ்ட் கார் “ என பிரத்யேக பாதுகாப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

image

அமெரிக்க அதிபருக்காகவே சிறப்பு அம்சங்களுடன் தயாரிக்கபட்ட ( கடிலாக் ஒன் ) “தி பீஸ்ட் “ காரில் நவீன ஆயுதங்கள், துப்பாக்கி, குண்டுவீச்சு கருவிகள் முதலுதவி அமைப்புகள் என பல அம்சங்களை கொண்டுள்ளது.

காரின் ஜன்னல் கண்ணாடிகள் துப்பாக்கி தோட்டாவால் துளைக்காத அளவிற்க்கு 5 அடுக்குகள் கொண்ட பாலி கார்பனேட்டால் ஆனது. மேலும் காரின் வெளிப்புறம் இராணுவ வாகனங்கள் தயாரிக்க பயன்படுத்தும் ஸ்டில், அலுமினியம், டைடேனியம் கொண்டு 8 இன்ஞ் அளவிற்கு தடிமனாகவும் காரின் கதவுகள் 10 இன்ஞ் தடிமன் கொண்டதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

image

கார் மீது குண்டு விழுந்தாலும் வெடிக்காத அளவிற்க்கு வலுவான பிளேட்டுகலால் காரின் ஆயிள் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கெமிக்கல் மற்றும் பயோலாஜிக்கல் எதிர்வினைகளை கண்டறிய சென்சார் வசதிகளும் சேட்டிலைட்டுடன் தொடர்பு கொள்ளும் வகையிலான தொலைபேசிகளும் இந்த காரில் பொருத்தபட்டுள்ளது. 18 அடி நீளம் கொண்ட இந்த பிரமாண்ட பீஸ்ட் காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் 12.50 கோடி ரூபாய்.

image

“தி பீஸ்ட் “ காரின் டிரைவருக்கு எந்தவொரு ஆபத்தான சூழ்நிலையிலும் அதிபரின் உயிரை காப்பாற்ற காரை திறம்பட ஓட்ட அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் அமைப்பால் சிறந்த பயிற்சி அளிக்கப்பட்ட ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments