அமராவதி முறைகேடு: விசாரணை நடத்த 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0 682

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்த போது அமராவதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நில ஒப்பந்தங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் நுண்ணறிவுப் பிரிவு டிஐஜி கோலி ரகுராம் ரெட்டி தலைமையில் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு குற்றவியல் நடைமுறை விதிகளின்படி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தும் என மாநில அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அரசு அமைத்த அமைச்சரவை துணைக்குழு வழங்கிய முதல் அறிக்கையின் அடிப்படையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments