இங்கிலாந்தில் 7 மீட்டர் விட்டம் கொண்ட முப்பரிமாண நிலவு மாதிரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
இங்கிலாந்தில் உள்ள ரோசெஸ்டர் (Rochester) நகரிலுள்ள தேவாலயம் ஓன்றில், 7 மீட்டர் விட்டம் கொண்ட முப்பரிமாண நிலவின் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மின்விளக்குகள் பொருத்தப்பட்ட பலூனில் இந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. நாசா சார்பில் நிலவிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் படம்பிடிக்கும் ஆர்பிட்டரில் இருந்து பெறப்பட்ட காட்சிகள் கொண்டு துல்லியமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து நிலவின் ஒரு பகுதியை மட்டுமே காணமுடியும். ஆனால் இந்த ஓவியம் ஆர்ப்பிடரில் இருந்து பெறப்பட்ட தகவலை கொண்டு முப்பரிமாணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் நிலவின் மற்ற பகுதியை தற்போது அனைவராலும் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments