உ.பி.யில் 3000 டன் தங்கப் படிமம் இருப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை - இந்திய புவியியல் ஆய்வு மையம்
உத்தரப்பிரதேசத்தில் 3 ஆயிரம் டன் அளவுக்கு தங்கப் படிமம் கண்டுப்பிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சோன்பத்ரா மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 3,350 டன் அளவிலான தங்க படிமங்கள் இருப்பதாக அண்மையில் செய்தி வெளியானது. இந்நிலையில் அந்த தகவலுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.
இவ்வளவு அதிக தங்கப் படிமம் குறித்து எந்த புவியியல் ஆய்விலும் மதிப்பிடப்படவில்லை என கூறியுள்ள அம்மையம், அப்பகுதியில் தங்கம் கிடைக்கும் சாத்தியக் கூறுகளுடன் கூடிய 52 ஆயிரத்து 806 டன் அளவிலான தாதுக்கள் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளது.
அவ்வகை தாதுவிலிருந்து டன் ஒன்றுக்கு 3.03 கிராம் தங்கம் மட்டுமே கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும், அதன்படி 160 கிலோவுக்கு மேல் தங்கம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments