ஜவகர்லால் நேருவை தவறாக சித்தரிக்கிறார்கள் - மன்மோகன்சிங் ஆதங்கம்

0 1202

பாரத் மாதா கீ ஜே மற்றும் தேசியவாத முழக்கங்கள் மூலம் ஒரு தவறான முன்னுதாரணம் உருவாகி வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருக்கும் கருத்து கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்த கோஷங்களை பயங்கரவாதம் மற்றும் உணர்ச்சிகரமான கருத்துகளுக்கு பயன்படுத்தும் வகையில் தவறாகப் பயன்படுத்துவதாக மன்மோகன்சிங் குற்றம் சாட்டியுள்ளார். பல கோடி இந்தியர்களை கணக்கில் கொள்ளாமல் இந்த கோஷங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

சர்வதேச அளவில் புகழுடன் விளங்கிய ராஜதந்திரியும் இலக்கியவாதியுமான, பண்டித ஜவகர்லால் நேருவின் வரலாற்றை படிக்கக்கூட பொறுமை இல்லாதவர்கள், அவருடைய புகழை சிதைக்க விரும்புவதாகவும் அவரைப் பற்றிய தவறான சித்தரிப்பை வெளியிட்டு வருவதாகவும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments