பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் மாணவன் உயிரிழப்பு

0 668

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில், மாணவன் ஒருவன் உயிரிழந்தான்.

மதனப்பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்த இரு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதில் கராத்தே தற்காப்புக் கலை பயிற்சி பெற்ற ஒருவன் சரமாரியாக தாக்கியதில், மற்றொரு மாணவன் ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளான்.

இதையடுத்து ஆசிரியர்கள் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்த மாணவனை தாக்கிய சக மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments