நிர்பயா வழக்கில் மரண தண்டனை பெற்ற வினய் சர்மாவின் மனு தள்ளுபடி
நிர்பயா வழக்கில் மரணத் தண்டனை பெற்ற வினய் சர்மாவுக்கு உயர்மட்ட மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி கோரிய மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பெற்ற தாயை யார் என்று புரியாத அளவுக்கு வினய் சர்மாவுக்கு மனச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மனநல சிகிச்சை அளிக்க அனுமதி கோரியும் அவனது தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங் வாதாடினார்.
இதற்கு, மரண தண்டனையை தள்ளிப்போடும் நோக்கில், வினய்சர்மா அடுத்தடுத்து பொய் மூட்டைகளை அடுக்கி வருவதாக திகார் சிறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இப்ரான் அகமது மறுப்பு தெரிவித்தார்.
மேலும், சிறை சுவரில் வினய் தன்னை தானே மோதி காயம் ஏற்படுத்திக்கொண்டதற்கான சிசிடிவி வீடியோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, சிறையில் வினய் சர்மாவுக்கு தேவையான சிகிச்சை மற்றும் உளவியல் உதவி வழங்கப்படுவதாக கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Comments