மாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்த 42 நாடுகளை சேர்ந்த தூதர்கள்

0 1318

தென்கொரியா, ரஷ்யா, நேப்பால் உள்ளிட்ட 42 நாடுகளை சேர்ந்த தூதர்கள் மாமல்லபுரத்திற்கு வருகை தந்து, அங்குள்ள சிற்பங்களை கண்டு ரசித்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற தொழில் முதலீடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தை முடித்துக்கொண்டு 42 நாடுகளை சேர்ந்த தூதர்கள், நேற்று மாமல்லப்புரம் அருகே உள்ள நட்சத்திர விடுதிக்கு வந்தனர்.

அங்கு அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பூக்கள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து காலையில் கடற்கரைக்கு சென்ற அவர்கள், அங்குள்ள ஐந்து ரதம், கடற்கரை கோயில், அர்ஜுனன் தபசு போன்ற இடங்களை கண்டு ரசித்ததோடு, அங்கு நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments