பாலின சமநீதி இல்லாமல் முழுமையான வளர்ச்சியை எட்ட முடியாது - பிரதமர் மோடி
பாலின சமநீதி இல்லாமல் முழுமையான வளர்ச்சியை எட்ட முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் 2 நாள் சர்வதேச நீதித்துறை கருத்தரங்கின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், ராணுவ சேவைகளில் பெண்கள் நியமனம், போர் விமானங்களுக்கு பெண் விமானிகள் தேர்வு, சுரங்கங்களில் பெண்கள் இரவுப் பணியாற்ற சுதந்திரம் என அரசு பல மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக குறிப்பிட்டார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் பாலின சமநீதியை உறுதிப்படுத்துவதாகவும், சுதந்திரம் அடைந்ததில் இருந்தே பெண்களுக்கும் வாக்குரிமை அளித்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அவர் கூறினார்.
கல்வி நிறுவனங்களில் ஆண்களை விட பெண்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும், சம்பளத்துடன் கூடிய பிரசவகால விடுப்பு அளிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்றும் அவர் கூறினார்.
Comments