வெள்ளத் தடுப்பு, குடிமராமத்து பணிகளை கண்காணிக்க மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

0 836

தமிழகம் முழுவதும் வெள்ளத் தடுப்பு மற்றும் குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்று கண்காணிக்க திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான ட்விட்டர் பதிவில், சென்னை அடையாற்றில் கட்டப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு சுவர் தரமற்று உள்ளதாக கூறி திமுகவினர் போராட்டம் நடத்தியதை மேற்கோள் காட்டியுள்ள ஸ்டாலின், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெள்ளத் தடுப்பு, குடிமராமத்துப் பணிகள் என்ற பெயரால் பல்லாயிரம் கோடி ரூபாய் தமிழகம் முழுவதும் செலவழிக்கப்படுவது இந்த லட்சணத்தில் தானா? பணிகள் நடக்கிறதா? அல்லது பணிகள் நடப்பதாகக் கணக்குக் காட்டப்படுகிறதா?

அனைத்து மாவட்டக் கழகங்களும் இதனைக் கண்காணிக்க வேண்டும்!
#admkcorruption

— M.K.Stalin (@mkstalin) February 22, 2020 ">

மேலும், தமிழகத்தில் பல்லாயிரம் கோடி செலவில் நடைபெற்று வரும் குடிமராமத்து மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் முறையாக நடக்கிறதா என்று ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments