நிர்பயா வழக்கில் மரண தண்டனையை தள்ளிப்போட அடுக்கடுக்காக பொய்மூட்டை
நிர்பயா வழக்கில் மரண தண்டனையை தள்ளிப்போடும் நோக்கில், குற்றவாளிகளில் ஒருவனான வினய்சர்மா அடுத்தடுத்து பொய் மூட்டைகளை அடுக்கி வருவதாக திகார் சிறை நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உடலில் காயம் மற்றும் மனச்சிதைவு உள்ளிட்ட நோய்களால் வினய் சர்மா பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவனது சார்பில் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கலான மனு மீது விசாரணை நடைபெற்றது.
அப்போது பெற்ற தாயை யார் என்று புரியாத அளவுக்கு வினய் சர்மாவுக்கு மனச்சிதைவு ஏற்பட்டுள்ளதால் அவனுக்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வாதாடிய வழக்கறிஞர் ஏ.பி.சிங், அதற்காக கண்ணீரும் விட்டார்.
இதை மறுத்த அரசு வழக்கறிஞர் இர்பான் அகமது, சிறையில் சுவரில் தனது தலையை தானே மோதி காயம் ஏற்படுத்தி நாடகமாடும் வினய் சர்மா, கடந்த வாரம் தனது வழக்கறிஞர் மற்றும் தாயுடன் இரண்டு முறை பேசியதாகவும் அதற்கான சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும் வாதிட்டார்.
Comments