விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள வெட்டுக்கிளிகள்... 3 லட்சம் சதுர கிலோமீட்டர் விளைநிலங்கள் நாசம்
பாகிஸ்தான் முழுவதும் சுமார் 3 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விளைநிலங்களை அழித்து நாசம் செய்த வெட்டுக்கிளிகளால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வேகமெடுத்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பால், விவசாயத்தை அதிகம் நம்பியுள்ள பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக ஜனவரி மாதத்தில் மாவு விலைகள் 15 சதவிகிதமும் சர்க்கரை விலை கடந்த ஆண்டை விட இரு மடங்காகவும் உயர்ந்துள்ளது. மேலும், வரும் மாதங்களில் உணவுத் துறை முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறும் வல்லுநர்கள், துரித கதியில் வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
Comments