டிரம்ப்-மெலனியா தாஜ்மகால் பயணத்தின் போது மோடி உடன் செல்வாரா?
அமெரிக்க அதிபர் டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும், தாஜ்மகாலுக்கு செல்லும்போது பிரதமர் மோடி உடன் செல்ல மாட்டார் என அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
அவர்கள் இருவருடனும் பிரதமர் மோடியும் ஆக்ராவில் தாஜ்மகால் செல்ல இருப்பதாக, அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் இதை மத்திய அரசு வட்டாரங்கள் மறுத்துள்ளன. தாஜ்மகாலை டிரம்பும் அவரது மனைவியும் பார்த்து ரசிக்கும்போது, இந்திய தரப்பில் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் யாரும் இடம்பெற மாட்டார்கள் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, வரும் 25ஆம் தேதி டெல்லி அரசுப் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக மெலனியா செல்லும்போது, அவரை வரவேற்பதற்கான பட்டியலில் இருந்து டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் பெயர்கள் மத்திய அரசால் நீக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
Comments