மக்காத குப்பைகளை இயற்கை உரமாக தயாரித்து இலவசமாக விநியோகம்
தாம்பரம் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் மக்காத குப்பைகளை, பசுமை உரக்குடில் மூலம் இயற்கை உரமாக தயாரித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது.
சுமார் 52 ஆயிரம் குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்களால் நாள்தோறும் 90 டன் அளவுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.
அதில் தனியாக பிரிக்கப்படும் 45 டன் மக்கும் குப்பைகள் 8 பசுமை உரக்குடில்களில் உள்ள பிரத்யேக எந்திரங்கள் மூலம் அறைத்து பதப்படுத்தி, பின்னர் அதில் பாக்டீரியாக்களை அழிக்க கூடிய மருந்துகளை கலந்து, வெயில் படமால் 40 நாட்கள் வைத்து இயற்கை உரமாக தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை உரம் விவசாயிகள் தவிர, வீடுகளில் செடி வளர்ப்போர்க்கும், மாடி தோட்டம் அமைத்துள்ளவர்களுக்கும் நகராட்சி சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது.
Comments