உரிமம் இல்லாமலும், தொழில் வரி செலுத்தாமலும் உள்ள கடைகளுக்கு சீல்

0 925

உரிமம் இல்லாமலலும், தொழில் வரி செலுத்தாமலும் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்து வருகிறது.

புதுப்பேட்டை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் சுமார் 24 கடைகள் மற்றும் 13 சிறிய வணிக வளாகங்களை, சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். உரிய கால அவகாசம் கொடுத்தும் உரிமத்தை புதுப்பிக்காமலும், தொழில் வரியை செலுத்தாமலும் இயங்கி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரியை செலுத்தும் பட்சத்தில் உடனே சீல் ஆற்றப்படும் என சென்னை மாநகராட்சி மண்டலம் 5இன், உதவி வருவாய் அலுவலர் திருப்பால் கூறினார்.

தொழில் உரிமத்தை 6 மாதத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டுமென்றும், மக்கள் வரி செலுத்தினால்தான், மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments