தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை: ஆஜராவதில் விலக்கு கேட்டு ரஜினி மனு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு நடிகர் ரஜினிகாந்த் விசாரணை ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த வன்முறையின் போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ரஜினி அப்போது கருத்து தெரிவித்திருந்தார்.
போராட்டக்களத்தில் சமூகவிரோதிகள் ஊடுறுவியதே துப்பாக்கிச் சூடுக்கு காரணம் என்று அவர் கூறியிருந்தார். இதனால் நடிகர் ரஜினியை விசாரணை ஆணையம் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று சிலர் மனு அளித்தனர். இதனை ஏற்று, நடிகர் ரஜினிகாந்த் வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் தனக்கு படப்பிடிப்பு வேலைகள் இருப்பதால் ஆஜராக முடியாத நிலை இருப்பதாகவும் எனவே, தனக்கு ஆஜராவதில் இருந்து விலக்க அளிக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் மூலம் ரஜினி மனு அளித்துள்ளார்.
Comments