இந்திய விமானப் படையின் மீட்பு விமானத்திற்கு அனுமதி வழங்க சீனா தாமதம்?
வூகானில் இருந்து இந்தியர்களை மீட்டு வருவதற்கான இந்திய விமானப்படை விமானத்திற்கு சீனா வேண்டுமென்றே அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படையின் மிகப்பெரிய விமானமான C-17 Globemaster மருந்து, மாத்திரைகளுடன் சென்று வூகான் நகருக்கு வழங்குவதோடு, அங்கு மீதமுள்ள இந்தியர்களையும் மீட்டு வரும் என கடந்த 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விமானத்திற்கு சீனா வேண்டுமென்றே அனுமதி வழங்காமல் தாமதித்து வருவதாகக் கூறப்படுகிறது.நிவாரண உதவி வழங்கும் விமானத்தை அனுமதிக்க மறுப்பதன் மூலம், இந்தியாவின் ஆதரவுக் கரத்தை சீனா ஏற்க மறுக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால், வூகானில் மீதமுள்ள 80 இந்தியர்களையும் அனுப்பி வைப்பதற்கு, இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேசி வருவதாகவும், இந்திய மீட்பு விமானத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏதும் இல்லை என்றும் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் (Geng Shuang) தெரிவித்துள்ளார்.
Comments