யாருடைய உணர்வையும் காயப்படுத்தாதபடி ராமர் கோயிலை கட்ட வேண்டும் - பிரதமர் மோடி

0 1857

சமூகத்தில் யாருடைய உணர்வையும் காயப்படுத்தாதபடி  அயோத்தியில் ராமர் கோயிலை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்று அக்கோயிலை கட்ட அமைக்கப்பட்ட அறக்கட்டளையினரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் தனது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசிய ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர (Shri Ram Janmabhoomi Teertha Kshetra Trust)அறக்கட்டளையினரிடம், சமூகநல்லிணக்கத்தை தொடர்ந்து பேணும் வகையிலும், யாருடைய உணர்வும் பாதிக்கப்படாதவாறும் ராமர் கோயிலை கட்டி முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  இதையடுத்து அயோத்திக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு அறக்கட்டளை உறுப்பினர்கள் அழைப்பு விடுத்தனர்.

இதை பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறக்கட்டளையினர், விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் திட்டபடி கோயிலின் முதல்கட்ட கட்டுமான பணி நடைபெறும் என தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments