பிஷப் பிராங்கோ மீது மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் புகார்

0 771

கன்னியாஸ்தீரியை பலவந்தப்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கிய கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.

அவர் மீதான வழக்கின் விசாரணை இன்று கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்க உள்ள நிலையில் இரண்டாவது கன்னியாஸ்திரியும் புகார் அளித்ததால் கேரளாவில் பரபரப்பு உருவானது.

35 வயதான அந்த கன்னியாஸ்திரி முந்தைய பாலியல் புகாரில் 14வது சாட்சியாக சேர்க்கப்பட்டவர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், தாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை விளக்கியுள்ளார். ஆனால் தாம் தொடர்ந்து தேவாலயப் பணியில் இருக்க விரும்புவதால் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று அந்தப் பெண் கேட்டுக் கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments