ரூ.2000 நோட்டு செல்லாது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் - ரிசர்வ் வங்கி

0 2735

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள் வழக்கம் போல் பயன்படுத்தலாம் எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 1-முதல் இந்தியன் வங்கி ஏடிஎம்-ல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்படலாம் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனிடையே, இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தரப்பில், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை படிப்படையாக அரசு குறைக்க உள்ளதாக தெரிவித்தது மேலும் அச்சத்தை அதிகரித்தது.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள், இரண்டாயிரம் ரூபாய் நோட்டை தடை செய்வதற்கான எண்ணம் தற்போது வரை மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments