உள்ளாட்சிப் பயிற்சிக்கு வந்த 10 பெண்களை நிர்வாணப்படுத்தி சோதனை

0 1382

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ளாட்சித் துறையில் பயிற்சிக்கு வந்த 10 பெண் ஊழியர்கள் நிர்வாணமாக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது குறித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் புஜ் நகரில் 64 மாணவிகளின் மாதவிடாய் சோதனைக்காக உள்ளாடையை கழற்ற வைத்த பெண் வார்டன் மற்றும் ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பயிற்சிக்கு வந்த திருமணமான பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதை குறித்து மருத்துவர்கள் அந்தரங்கமான கேள்விகள் கேட்டதாகவும் பத்து பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு சோதிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மற்ற பெண்கள் முன்னால் இந்த சோதனை நடத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூச்சத்திலும் அவமானத்திலும் குறுகிப்போனதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments