ஈரான் நாடாளுமன்ற தேர்தல் -அதிபர் ஹசன் ரவுஹானி வெற்றி பெறுவாரா..?
ஈரானில் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசன் ரவுஹானி வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் கடந்த 1979ம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு நடைபெற்றுள்ள 11-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். இதில் 290 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 5 கோடிக்கும் அதிகமானவர்கள் இத்தேர்தலில் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, விலைவாசி உயர்வு என பல சிக்கல்களைச் சந்தித்து வரும் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் அரசு தனது பலத்தை மீண்டும் நிரூபிக்குமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்பு காரணமாகவும், ஈரானின் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையிலும் மீண்டும் ரவுஹானியே வெற்றி பெறுவார் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments