கொரோனா வைரஸ் எதிரொலி - வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை
சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் வரலாறு காணாத வகையில் 4 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் தொழில் சுழற்சி தேக்கமடைந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்வதால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.
ஏற்கனவே ஒரு சவரன் 31 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தததால் நடுத்தர மக்கள் கவலை அடைந்திருந்தனர். இந்நிலையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 73 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 4 ஆயிரத்து 51 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பார்வெள்ளி ஒரு கிலோ 900 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments