"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
அமெரிக்கா- தாலிபான்கள் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு?
அமெரிக்கா மற்றும் தாலிபான்கள் இடையே அமைதி ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்ப்பியோ தெரிவித்துள்ளார்.
இரட்டைக் கோபுரத் தாக்குதலையடுத்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து தாலிபான்களுக்கும், அமெரிக்கப் படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த சண்டை காரணமாக இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து இருதரப்பினரும் அமைதி ஒப்பந்தம் போடப்படுவது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றுவரும் இந்த பேச்சுவார்த்தை, பல்வேறு தடைகளை தாண்டி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் வரும் 29-ம் தேதி கையெழுத்தாகலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments