பிரதமர் மோடிக்கு இரண்டு புதிய ஆலோசகர்கள் நியமனம்
பிரதமர் மோடிக்கு இரண்டு புதிய ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பாஸ்கர் குல்புலே, அமர்ஜித் சின்ஹா ஆகியோரை பிரதமரின் தனி ஆலோசகர்களாக நியமித்து மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஆணை பிறப்பித்துள்ளது. 1993 ஐ.ஏ.எஸ் பட்டம் பெற்ற இரு அதிகாரிகளில் குல்புலே மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் .
அவர் ஏற்கனவே பிரதமர் அலுவலக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சின்ஹா பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
Comments