சென்னை அடையாற்றில் வேதியல் கழிவு - பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
சென்னை அடையாற்றில் வேதியல் கழிவுகளை வெளியேற்றுபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க குழு அமைத்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு பின்புறம் ஓடும் அடையாற்றில் கழிவுநீர் கலப்பதால் ஆற்றில் நுரை பொங்கி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவது குறித்து தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, நீர்நிலை மாசை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளபோதும் இது போன்ற நிலை தொடர்வதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், ஆறுகள் மறுசீரமைப்பு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை இணைத்து குழு அமைத்தனர். இந்த குழு, சம்பந்தபட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கவும் 3 மாதத்தில் விரிவான அறிக்கை தாக்க செய்யவும் உத்தரவிட்டு வழக்கை மே 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Comments