ATM இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய நைஜீரிய இளைஞர் கைது

0 1276

புதுச்சேரியில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய நைஜீரிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை அருகே இயங்கி வரும் SBI ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த பொதுமக்கள், எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவலளித்தனர்.

மேலும் அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களிலும் பதிவிட்டனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் சென்னையில் தங்கியிருக்கும் நைஜீரியாவை சேர்ந்த இளைஞர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம் எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், போலி ஏடிஎம் கார்டுகள், லேப்டாப்புகளை பறிமுதல் செய்தனர். பல்கேரியா, வெனிசுலாவை சேர்ந்த மேலும் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments