பள்ளி மாணவர்களுக்கான Helpline மூலம் 1.72 லட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் - அமைச்சர்
பள்ளி மாணவர்களுக்கான ஹெல்ப் லைன் சேவை மூலம் இதுவரை ஒரு லட்சத்து 72 பேர் பதிவு செய்து ஆலோசனை பெற்றுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் நடக்கும் சிறப்பு வகுப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சியுடன் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Comments