EVP பிலிம் சிட்டியில் பாதுகாப்பு உபகரணங்கள், வாகன வசதிகள் இல்லை - ஆர்.கே.செல்வமணி
ஈ.வி.பி பிலிம் சிட்டியில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள், வாகன வசதிகள் உள்ளிட்டவை இல்லை என்று ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி குற்றம்சாட்டியுள்ளார்.
'இந்தியன் 2' படப்பிடிப்பு விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லக்கூட ஈவிபியில் வாகனம் இல்லை என குற்றம்சாட்டினார்.
இனி அனைத்து படப்பிடிப்பு தளங்களிலும் முதலுதவி வாகனம் இருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஃபெஃப்சி தொழிலாளர்கள் யாரும் பணியாற்ற மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments