Tinder செயலி மூலம் அறிமுகமான பெண்ணை கொலை செய்தவனுக்கு ஆயுள் தண்டனை

0 951

நியூசிலாந்தில் டிண்டர் செயலி மூலம் அறிமுகமான பெண்ணை கொலை செய்தவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த கிரேஸ் மிலன் என்ற பெண், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது ஆன்லைன் டேட்டிங் செயலியான டிண்டர் மூலம் அறிமுகமான நபரை சந்தித்த மிலன், அவரது வீட்டில் தங்கியுள்ளார்.

இதையடுத்து மர்மமான முறையில் மிலன் உயிரிழந்த நிலையில், உடலுறவின் போது மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக ஆண் நண்பர் கூறினான்.

இந்த காரணம் நம்பும்படியாக இல்லாததால் தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள ஆக்லேண்ட் நீதிமன்ற நீதிபதி, அந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து  உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments