துறவியின் பாடல்களை கேட்கும் காட்டு விலங்குகள்

0 1435

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு துறவின் பாடல்களை கேட்க அங்கு வாழும் காட்டு விலங்குகள் தினமும் வருகின்றன.

மத்தியபிரதேச மாநிலத்தில் வாழ்கிறார் சீதாராம் எனும் துறவி, இவர் ராஜ்மாடா எனும் காட்டுப்பகுதியில் சோன் ஆற்றின் கரையோரம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் குடிசை ஒன்றை கட்டி வசித்து வந்துள்ளார்,ஒருநாள் காலை நேரத்தில் கடவுளின் பாடல்களை வீணை வாசித்தபடி ஆழ்ந்து பாடிக்கொண்டிருந்தார், திடீரரென கண்விழித்து பார்க்கும் போது துறவிக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது, அவரை சுற்றிலும் கரடிகள் அவரின் பாடல்களை கேட்டுக்கொண்டு இருந்தன.

அதை கண்ட அவர் ஆச்சர்யத்துடன் திகைத்து நின்று கொண்டு இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் தான் முதலில் பயந்ததாகவும் பின்னர் அவை தாக்காமல் தன்னுடைய பாடல்களை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு இருந்ததை கண்டு அந்த கரடிகளுக்கு பிரசாதம் வழங்கியதும் அதை சாப்பிட்டதாகவும் தெரிவித்தார். அன்று முதல் அந்த கரடிகள் இவர் பாடல்களை பாட ஆரம்பித்ததும் அவரின் குடிசைக்கு வந்து பாடல்களை கேட்பதாவும் தெரிவித்தார்.மேலும் அந்த கரடிகளுக்கு பெயர் வைத்து அவற்றுடன் பழகி வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments