பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு
செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 ஆசிரியர்களை குற்றவாளிகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆசிரியர்கள் நாகராஜ், புகழேந்தி ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் 2012 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து மாணவி ஒருவரின் பெற்றோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சாட்சிகளின் வாக்கு மூலங்களை செங்கல்பட்டு நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டதாக கூறி, அதன் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், இருவரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, தண்டனை விவரம் 25-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தது.
Comments