நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ள சூரிய மின் சக்தி உற்பத்தி

0 905

பிரேசிலில் பச்சை பசேல் என்று விளைந்து நிற்கும் பயிர்கள் மற்றும் கரும்புத் தோட்டங்களுக்கு இடையே குறைந்த செலவிலான சூரிய மின்சக்தி உற்பத்தியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

விவசாய நகரமான போர்டோ பெலிஸில் ((Porto Feliz)) அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகள், ஓட்டல்கள், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு பயன் அளிக்கிறது.

நாடு முழுவதும் இந்த சூரிய மின்சக்தி உற்பத்தி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சீனாவில் இருந்து அதிகளவில் சோலார் பேனல்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்நாட்டில் தயாரிப்பதற்கும் கார்ப்பரேட் மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் அதிக ஊக்கமளித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments