ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் உயருகிறது

0 1178

சென்னை மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் வரும் ஏப்ரல் மாதம் முதல் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் கூடுதலாக 5 ரூபாய் உயர்த்தப்படுகிறது.

நாடுமுழுவதும் பயணிகள் அல்லாதவர்களின் கூட்டத்தை ரயில் நிலையங்களில் கட்டுப்படுத்தும் வகையில் முடிவு எடுத்துக்கொள்ள ரயில்வே வாரியம், அந்தந்த கோட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட சென்டிரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தற்போதுள்ள ரூபாய் 10 பிளாட்பார டிக்கெட் கட்டணம், ரூபாய் 5 உயர்த்தப்பட்டு 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை தொடங்குவதையொட்டி வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் முடிய 3 மாதங்களுக்கு இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments