குருமூர்த்தி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 10 பேர் மீது குண்டர் சட்டம்

0 1145

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசிய 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் பத்திரிகை ஆசிரியராகவும் உள்ளார். துக்ளக்கின் 50வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த்  பெரியார் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், குருமூர்த்தி வீட்டின் மீது கடந்த மாதம் 26-ம் தேதி சிலர் பெட்ரோல் குண்டு வீசினர்.

பிறகு தாக்குதல் நடத்த வந்த அவர்கள், செக்யூரிட்டி துரத்டியதால் ஓடிவிட்டனர்.  சிசிடிவி கேமரா பதிவை கொண்டு விசாரணை நடத்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்திலுள்ள ஐசிஎஃப் பகுதி ஜனா, ராயப்பேட்டை சசி, தமிழ் என்ற செல்லக்கண்ணா, பாபு உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர். 10 பேர் மீதும் ஒரு வருடம் பிணையில் வர முடியாத குண்டர் சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments