பூமிக்கு அடியில் 14 ஆயிரம் டன் லித்தியம் - ஆய்வில் கண்டுபிடிப்பு
கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே காவிரிப் படுகையில் பேட்டரிகளுக்குப் பயன்படும் லித்தியம் உலோகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி ஆணையத்தின் ஒரு பிரிவான அணு கனிம இயக்குநரக ஆராய்ச்சியாளர்கள் பட்னா என்ற கிராமத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அந்த ஆய்வில் அங்கு பூமிக்கு அடியில் சுமார் 14 ஆயிரத்து 100 டன் அளவிற்கு லித்தியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரிய உலோகமான லித்தியம், செல்போன்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்குப் பயன்படும் பேட்டரி தயாரிப்புகளில் முக்கிய பங்காற்றுகிறது. சிலி, ஆஸ்திரேலியா, அர்ஜெண்ட்டினா உள்ளிட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் இது குறைவான லித்தியம் இருப்புதான் என்றாலும் மாசற்ற எரிபொருளை நோக்கி நடைபோடும் இந்தியாவுக்கு இது மகிழ்ச்சியான செய்தியே என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Comments