நடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு

0 1210

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை அடுத்த நாசரேத்பேட்டையில், ஈவிபி ஃபிலிம் சிட்டியில், இந்தியன்-2 படப்பிடிப்பில் நேரிட்ட இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததோடு 10 பேர் காயமடைந்தனர். விபத்துக்கு காரணமான கிரேன் ஆபரேட்டரை போலீசார் தேடி வரும் நிலையில், படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்து நடைபெற்றபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப, வழக்கை விசாரித்து வரும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments