கொரோனா வைரஸ் எதிரொலி - மின்னணு பொருட்களின் விலை உயர வாய்ப்பு
கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் பேனல் (panel) உற்பத்தி பாதித்து விநியோகம் முடங்கியிருப்பதால், இந்தியாவில் தொலைக்காட்சி பெட்டிகளின் (Television) விலை அடுத்த மாதம் முதல் 10 சதவீதம் வரை உயரலாம் என்று கூறப்படுகிறது.
விலை குறைவு என்பதால் சீனாவிலிருந்து பேனல்களை அதிகளவில் டி.வி. தயாரிப்பு நிறுவனங்கள் இறக்குமதி செய்து வருகின்றன. கொரோனா வைரஸால் அங்கு உற்பத்தி குறைந்து பேனல் விநியோகம் தடைபட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பேனல்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்திருப்பதால், அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தொலைக்காட்சி பெட்டிகளின் விலையை உயர்த்த டி.வி. தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏசி, பிரிட்ஜ் சாதனங்களுக்கான கம்ப்ரசர்களின் விநியோகமும் தடைபட்டுள்ளதால் அவற்றின் விலையும் உயரலாம்.
Comments